அகத்தியர் சைதன்னியம் – திருவடி தவம் முறைமை பெருமை வாரான பெரியோர்கள் பாசை எல்லாம் மகாரம் அதுக்கே ஆகும் மனம் வேறில்லை கூரான இருவிழியால் அடிமூலம் பார் குறிதோணும் வெளிதோணும் தோசம்தீரும் பேரான அட்டசித்தி வசமே ஆகும் பிரியமுறும் மருந்தெல்லாம் சித்தியாகும் ஏறாத வாசியது ஏறிற்றானால் எமன்இல்லை வினைஇருள் இல்லை எண்ணே (6) விளக்கம் : திருவடி தவம் இப்படித்தான் ஆற்றுவார் அறிந்தோர் தவம் செயும் முறை விளக்குகிறார் சித்தர் பெருமான் அதாவது , இரு விழியாலே…