அகத்தியர் ஞான சைதன்னியம் 51 சாவதுதான் எதினாலே வந்ததுஎன்றால் சண்டாள மனம் நிலைக்காத் தோசத்தாலே ஆவதுவும் அழிவதுவும் விந்தால் அப்பா ஆச்சரியம் பாழ்குழியின் ஆசையாலே காவல்அது கட்டழிந்து போனதாலே காட்சிஎல்லாம் பொய்யாச்சு கண்டுபாரு பாவதுவும் சுண்ணாம்பில் ஒட்டினாப்போல் பரமகுரு பீடம் அதைப் பகுத்திடாயே (17) விளக்கம் : சாவு மரணம் எதுக்கு மானிடர்க்கு வருது எனில் ?? அடங்கா மனத்தால் அல்லாது வேறிலை விந்துதனில் இருக்கும் விகாரத்தால் பிறப்பும் இறப்பும் வருது அதனால் பெண் மோகம் இச்சை…