*அகத்தியர் மெய்ஞானம்* கண்டத்தில் நின்றசித் தறிவைப்பாரு கண்புருவத் திடைவெளி னொளியைப்பாரு தண்டுத்த நாசி நுனி வழியேயேறி சண்முகமா முத்திரையைத் தாக்கிப்பாரு அண்டத்தி லொளி தோற்றும் நடுவே நின்று அங்குமிங்கு மெங்கி நின்ற அடவைப் பாரு கண்டத்தின் முனைப்பார்குண் டலியைப்பாரு கருவான மூலவா தாரம் பாரே பொருள் : கண்டம் எனில் 2 துண்டுகளாக இருக்கும் கண் ஒளியைப் பார். தியானம் தவம் பழகு. பின் புருவ மத்தி ஒளி பார்த்து தவம் செய்க. வாசல் திறந்து உச்சிக்கு…