அருட்பா – ஆறாம் திருமுறை – சுத்த சிவ நிலை 12 நானே தவம்புரிந்தேன் நானிலத்தீர் அம்பலவன் தானேவந் தென்னைத் தடுத்தாண்டான் – ஊனே புகுந்தான்என் உள்ளம் புகுந்தான் உயிரில் புகுந்தான் கருணை புரிந்து. பொருள் : நான் தவம் செய்தேன் அதனால் உலகத்தவரே – பொதுவில் ஆடும் சிற்றம்பலத்தான் என்னை உலகம் பக்கம் சாயாமல் தன் பக்கம் திருப்பிகொண்டான் அபெஜோதி சுத்த சிவம் என் உடல் – ஆன்மாவில் கலந்து கொண்டான் தன் கருணையினாலே இதில்…