அருட்பா – ஆறாம் திருமுறை – நடராஜபதி மாலை நடராஜபதி மாலை திருச்சிற்றம்பலம் என்இயல் உடம்பிலே என்பிலே அன்பிலே இதயத்தி லேதயவிலே என்உயிரி லேஎன்றன் உயிரினுக் குயிரிலே என்இயற் குணம்அதனிலே இன்இயல்என் வாக்கிலே என்னுடைய நாக்கிலே என்செவிப் புலன்இசையிலே என்இருகண் மணியிலே என்கண்மணி ஒளியிலே என்அனு பவந்தன்னிலே தன்இயல்என் அறிவிலே அறிவினுக் கறிவிலே தானே கலந்துமுழுதும் தன்மயம தாக்கியே தித்தித்து மேன்மேல் ததும்பிநிறை கின்றஅமுதே துன்னிய பெருங்கருணை வெள்ளமே அழியாத சுகமே சுகாதீதமே சுத்தசிவ சன்மார்க்க நிதியே…