அருட்பா – ஆறாம் திருமுறை – நடராஜபதி மாலை நடராஜபதி மாலை திருச்சிற்றம்பலம் 1. அருள்நிலை விளங்குசிற் றம்பலம்எ னுஞ்சிவ சுகாதீத வெளிநடுவிலே அண்டபகி ரண்டகோ டிகளும் சராசரம் அனைத்தும்அவை ஆக்கல்முதலாம் பொருள்நிலைச் சத்தரொடு சத்திகள் அனந்தமும் பொற்பொடுவி ளங்கிஓங்கப் புறப்புறம் அகப்புறம் புறம்அகம் இவற்றின்மேல் பூரணா காரமாகித் தெருள்நிலைச் சச்சிதா னந்தகிர ணாதிகள் சிறப்பமுதல் அந்தம்இன்றித் திகழ்கின்ற மெய்ஞ்ஞான சித்திஅனு பவநிலை தெளிந்திட வயங்குசுடரே சுருள்நிலைக் குழலம்மை ஆனந்த வல்லிசிவ சுந்தரிக் கினியதுணையே சுத்தசிவ…