அருட்பா – 6ம் திருமுறை நடராஜபதி மாலை திருச்சிற்றம்பலம் எண்ணிலா அண்டபகி ரண்டத்தின் முதலிலே இடையிலே கடையிலேமேல் ஏற்றத்தி லேஅவையுள் ஊற்றத்தி லேதிரண் டெய்துவடி வந்தன்னிலே கண்ணுறா அருவிலே உருவிலே குருவிலே கருவிலே தன்மைதனிலே கலையாதி நிலையிலே சத்திசத் தாகிக் கலந்தோங்கு கின்றபொருளே தெண்ணிலாக் காந்தமணி மேடைவாய்க் கோடைவாய்ச் சேர்ந்தனு பவித்தசுகமே சித்தெலாஞ் செயவல்ல தெய்வமே என்மனத் திருமாளி கைத்தீபமே துண்ணுறாச் சாந்தசிவ ஞானிகள் உளத்தே சுதந்தரித் தொளிசெய்ஒளியே சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராஜபதியே….