அருட்பா – 6 திருமுறை – நடராஜபதி மாலை திருச்சிற்றம்பலம் உடல்எலாம் உயிர்எலாம் உளம்எலாம் உணர்வெலாம் உள்ளனஎ லாங்கலந்தே ஒளிமயம தாக்கிஇருள் நீக்கிஎக் காலத்தும் உதயாத்த மானம்இன்றி இடல்எலாம் வல்லசிவ சத்திகிர ணாங்கியாய் ஏகமாய் ஏகபோக இன்பநிலை என்னும்ஒரு சிற்சபையின் நடுவே இலங்நிறை கின்றசுடரே கடல்எலாம் புவிஎலாம் கனல்எலாம் வளிஎலாம் ககன்எலாம் கண்டபரமே காணாத பொருள்எனக் கலைஎலாம் புகலஎன் கண்காண வந்தபொருளே தொடல்எலாம் பெறஎனக் குள்ளும் புறத்தும்மெய்த் துணையாய் விளங்கும்அறிவே சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட…