அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 27 பற்றுதலும் விடுதலும்உள் அடங்குதலும் மீட்டும் படுதலொடு சுடுதலும்புண் படுத்தலும்இல் லாதே உற்றொளிகொண் டோங்கிஎங்கும் தன்மயமாய் ஞான உருவாகி உயிர்க்குயிராய் ஓங்குகின்ற நெருப்பே சுற்றுதலும் தோன்றுதலும் மறைதலும்வெச் சென்றே சுடுதலும்இல் லாதென்றும் துலங்குகின்ற சுடரே முற்றும்உணர்ந் தவர்உளத்தே திருச்சிற்றம் பலத்தே முயங்கும்நடத் தரசேஎன் மொழியும்அணிந் தருளே பொருள் : இது கண் தவம் பயிற்சி பற்றியது ஆம் நாம் திருவடியை பிடித்தலும் -…