அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 48 நன்மைஎலாம் தீமைஎனக் குரைத்தோடித் திரியும் நாய்க்குலத்தில் கடையான நாயடியேன் இயற்றும் புன்மைஎலாம் பெருமைஎனப் பொறுத்தருளிப் புலையேன் பொய்உரைமெய் உரையாகப் புரிந்துமகிழ்ந் தருளித் தன்மைஎலாம் உடையபெருந் தவிசேற்றி முடியும் தரித்தருளி ஐந்தொழில்செய் சதுர்அளித்த பதியே இன்மைஎலாம் தவிர்ந்தடியார் இன்பமுறப் பொதுவில் இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே. பொருள் : நாம் நன்மை என நினைத்திருப்பது எல்லாம் தீமையில் தான் முடியும் என எனக்கு…