அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 29 தாய்முதலோ ரொடுசிறிய பருவமதில் தில்லைத் தலத்திடையே திரைதூக்கத் தரிசித்த போது வேய்வகைமேல் காட்டாதே என்றனக்கே எல்லாம் வெளியாகக் காட்டியஎன் மெய்உறவாம் பொருளே காய்வகைஇல் லாதுளத்தே கனிந்தநறுங் கனியே கனவிடத்தும் நனவிடத்தும் எனைப்பிரியாக் களிப்பே தூய்வகையோர் போற்றமணி மன்றில்நடம் புரியும் சோதிநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே. பொருள் : வள்ளல் பெருமான் தன் தாய் மற்றும் உறவினர் சூழ சிதம்பரம் கோவிலில் தரிசனம்…