அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 62 சத்தியநான் முகர்அனந்தர் நாரணர்மற் றுளவாம் தலைவர்அவர் அவருலகில் சார்ந்தவர்கள் பிறர்கள் இத்திசைஅத் திசையாக இசைக்கும்அண்டப் பகுதி எத்தனையோ கோடிகளில் இருக்கும்உயிர்த் திரள்கள் அத்தனைபேர் உண்டாலும் அணுவளவும் குறையா தருள்வெளியில் ஒளிவடிவாய் ஆனந்த மயமாய்ச் சுத்தசிவ அனுபவமாய் விளங்கியதெள் ளமுதே துயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே பொருள் : பிரமர் நாரணர் மற்ற தொழில் தலைவர்கள் – அவர் உலகில் சார்ந்தவர்கள் -…