அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 31 திரைஇலதாய் அழிவிலதாய்த் தோலிலதாய்ச் சிறிதும் சினைப்பிலதாய்ப் பனிப்பிலதாய்ச் செறிந்திடுகோ திலதாய் விரைஇலதாய்ப் புரைஇலதாய் நார்இலதாய் மெய்யே மெய்யாகி அருள்வண்ணம் விளங்கிஇன்ப மயமாய்ப் பரைவெளிக்கப் பால்விளங்கு தனிவெளியில் பழுத்தே படைத்தஎன துளத்தினிக்கக் கிடைத்ததனிப் பழமே உரைவளர்மா மறைகளெலாம் போற்றமணிப் பொதுவில் ஓங்கும்நடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே. பொருள் : அபெஜோதியின் தனிப்பெருமையை உணர்த்துகிறார் உரைக்கிறார் வள்ளல் பெரு்மான் மறைப்பு இலாததாய் அழிவில்லாததாய் மூடுதல்…