அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 33 தெற்றியிலே நான்பசித்துப் படுத்திளைத்த தருணம் திருஅமுதோர் திருக்கரத்தே திகழ்வள்ளத் தெடுத்தே ஒற்றியிற்போய்ப் பசித்தனையோ என்றெனையங் கெழுப்பி உவந்துகொடுத் தருளியஎன் உயிர்க்கினிதாந் தாயே பற்றியஎன் பற்றனைத்தும் தன்அடிப்பற் றாகப் பரிந்தருளி எனைஈன்ற பண்புடைஎந் தாயே பெற்றியுளார் சுற்றிநின்று போற்றமணிப் பொதுவில் பெருநடஞ்செய் அரசேஎன் பிதற்றும்உவந் தருளே. பொருள் : தன் சிறு வயது சம்பவம் நினைவு கூர்கின்றார் ஓர் இரவில் இவர் உணவு…