அருட்பா – 6 ம் திருமுறை – உய்வகை கூறல் – 10 கலைஇ ருந்ததோர் திருச்சிற்றம் பலத்திலே கருணை நிலைஇ ருந்தது நினைத்தவை யாவையும் பெறலாம் மலைஇ ருந்தென இருப்பிரேல் வம்மினோ அன்றிக் கொலைவி ரும்புவீர் எனிற்புறத் தேகுமின் குலைந்தே. பொருள் : ஏக கலை -சிவக்கலை விளங்கும் சிற்றம்பலத்திலே கருணை பொங்கும் சிவம் இருக்கின்ற படியால் நினைத்தது யாவும் பெறலாம் – எல்லாம் ஈடேறும் – எல்லாம் சித்தியாகும் அவ்வி்டத்து மலை போன்று உறுதியுடன்…