அருட்பா – 6 ம் திருமுறை – உய்வகை கூறல் – 2 வாரம் செய்தபொன் மன்றிலே நடிக்கும்பொன் அடிக்கே ஆரம் செய்தணிந் தவர்க்குமுன் அரிஅயன் முதலோர் வீரம் செல்கிலா தறிமினோ வேதமேல் ஆணை ஓரம் சொல்கிலேன் நடுநின்று சொல்கின்றேன் உலகீர் பொருள் : பொன்னம்பலத்திலே நடிக்கும் ஆடல் அரசின் திருஅடி தன் சிரசில் சூடியவர் முன் பிரமன் மால் ஆகியோரின் வீரம் தன்மை செயல் – ஐந்தொழில் நடக்காது வேகாது என்று அறிந்து கொள்வீர் உலகீர்…