அருள் – ஞானியரின் பார்வையில் 1 அ பெ ஜோதி அகவல் அருளலா தணுவு மசைந்திடா ததனால் அருணலம் பரவுகென் றறைந்தமெய்ச் சிவமே அருளுறி னெல்லா மாகுமீ துண்மை அருளுற முயல்கவென் றருளிய சிவமே அருணெறி யொன்றே தெருணெறி மற்றெலாம் இருணெறி யெனவெனக் கியம்பிய சிவமே அருள்பெறிற் றுரும்புமோ ரைந்தொழில் புரியுந் தெருளிது வெனவே செப்பிய சிவமே அருளறி வொன்றே யறிவுமற் றெல்லாம் மருளறி வென்றே வகுத்தமெய்ச் சிவமே அருட்சுக மொன்றே யரும்பெறற் பெருஞ்சுகம் மருட்சுகம் பிறவென…