ஆன்ம அனுபவம் – சிவவாக்கியர் அரியுமல்ல வயனுமல்ல வலப்புறத்தி லப்புறம் கருமைசெம்மை வெண்மையைக் கடந்து நின்றகாரணம் பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்கள் துரியமுங் கடந்துநின்ற தூரதூர தூரமே. 10 விளக்கம் : ஆன்மாவானது பிரம்மாவும் விஷ்ணுவுமல்ல அதெல்லாம் தாண்டிய நிலை அனுபவம் எல்லா வண்ணம் கடந்த அனுபவம் எல்லா அளவும் கடந்தது அது துரியமும் கடந்த துரியதீதம் எனும் துவாத சாந்தப்பதம் விளங்கு ஆன்ம ஜோதி அனுபவம் அதைப் பற்றுங்கள் வெங்கடேஷ்…