ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 17 தனித்தனிமுக் கனிபிழிந்து வடித்தொன்றாக் கூட்டிச் சர்க்கரையுங் கற்கண்டின் பொடியுமிகக் கலந்தே தனித்தநறுந் தேன்பெய்து பசும்பாலுந் தேங்கின் தனிப்பாலுஞ் சேர்த்தொருதீம் பருப்பிடியும் விரவி இனித்தநறு நெய்அளந்தே இளஞ்சூட்டின் இறக்கி எடுத்தசுவைக் கட்டியினும் இனித்திடுந்தெள் ளமுதே அனித்தமறத் திருப்பொதுவில் விளங்குநடத் தரசே அடிமலர்க்கென் சொல்லணியாம் அலங்கல்அணிந் தருளே. பொருள் : மா பலா வாழை கூட்டி அதன் சாறு – ரசம் + சர்க்கரை + கற்கண்டு கூட்டி +…