ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 19 கண்களிக்கப் புகைசிறிதும் காட்டாதே புருவக் கலைநடுவே விளங்குகின்ற கற்பூர விளக்கே பண்களிக்கப் பாடுகின்ற பாட்டில்விளை சுகமே பத்தருளே தித்திக்கப் பழுத்ததனிப் பழமே மண்களிக்க வான்களிக்க மணந்தசிவ காம வல்லிஎன மறைகளெலாம் வாழ்த்துகின்ற வாமப் பெண்களிக்கப் பொதுநடஞ்செய் நடத்தரசே நினது பெரும்புகழ்ச்சே வடிகளுக்கென் அரும்பும்அணிந் தருளே பொருள் : கண்கள் இன்பமுற புகை சிறிதும் காட்டாமல் நெற்றி நடுவே ஒளிரும் ஆன்ம ஜோதியே ஆன்மாவின் மணம் கற்பூரம் ஆம்…