ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 21 நான்என்றும் தான்என்றும் நாடாத நிலையில் ஞானவடி வாய்விளங்கும் வானநடு நிலையே ஊன்என்றும் உயிர்என்றும் குறியாமே முழுதும் ஒருவடிவாம் திருவடிவம் உவந்தளித்த பதியே தேன்என்றும் கரும்பென்றும் செப்பரிதாய் மனமும் தேகமும்உள் ளுயிர்உணர்வும் தித்திக்கும் சுவையே வான்என்றும் ஒளிஎன்றும் வகுப்பரிதாம் பொதுவில் வயங்குநடத் தரசேஎன் மாலையும்ஏற் றருளே பொருள் : தன் போதம் சிறிதும் செல்ல முடியாத நிலையில் – அறிவு வடிவாய் விளங்கும் வான் நடு் பொருளே உடல்…