ஆறாம் திருமுறை – திருவருட்பேறு 1 படிகள் எலாம் ஏற்றுவித்தீர் பரமனடம் புரியும் பதியை அடைவித்தீர் அப்பதி நடுவே விளங்கும் கொடிகள் நிறைந்த மணிமாடக் கோயிலையும் காட்டிக் கொடுத்தீர் அக்கோயிலிலே கோபுரவாயிலிலே செடிகள் இலாத் திருக்கதவம் திறப்பித்துக் காட்டி திரும்பவும் மூடுவித்தீர் திறந்திடுதல் வேண்டும் அடிகள் இது தருணம் இனி அரைக்கணமும் தரியேன் அம்பலத்தே நடம் புரிவீர் அளித்தருள்வீர் விரைந்தே 1 படிகள் எலாம் ஏற்றுவித்தீர் – 36 தத்துவப் படிகளைக் கடக்கச் செய்தீர் 2 பரமனடம்…