ஆறாம் திருமுறை திருவருட்பேறு பெட்டி இதில் உலவாத பெரும்பொருள் உண்டிது நீ பெறுக என அது திறக்கும் திறவுகோலும் எட்டிரண்டும் தெரியாதேன் என் கையில் கொடுத்தீர் இது தருணம் திறந்ததனை எடுக்க முயல்கின்றேன் அட்டிசெய்ய நினையாதீர் அரைக்கணமும் தரியேன் அரைக்கணத்துக்கு ஆயிரங்கோடி ஆக வட்டியிட்டு நும்மிடத்தே வாங்குவன் நும் ஆணை மணிமன்றில் நடம்புரிவீர் வந்தருள்வீர் விரைந்தே 1பெட்டி இதில் உலவாத பெரும்பொருள் உண்டிது – இது தலையைக் குறிக்கின்றது ( தலையினுள் இருக்கும் சுழிமுனை அடைப்பைக் குறிக்கின்றது…