என் நண்பர் – திருமதி கல்யாணி கவி தொகுப்பு 1 கசப்பான உனது நிஜம் இனிக்க இனிக்கத் தோய்ந்த நினைவுகளால் சகித்துக் கொண்டு வாழ மாட்டாமல் கழற்றி வைத்திருக்கிறேன் இதயத்தை மறந்து போகும் வரை துடித்துக் கொண்டு இருக்கட்டும் 2 எழுதி முடித்த கணக்கில் ஒன்று மட்டும் உண்மை ஆராய்ச்சி மணியின் கொள்முதல் செலவும் – அதன் நடுநாவை அறுத்த சீரமைப்புச் செலவும் 3 அவள் கிழிசல் உடுத்தியிருந்தாள் அழுக்கு தலையோடு இருந்தாள் அரைவயிறு காலியாயிருந்தாள் வெறும்…