ஔவைக் குறள் – 7 குரு வழி 1. நெறிப்பட்ட சற்குரு நேர்வழி காட்டில் பிரிவற்றிருக்கும் சிவம் திரண்ட கருத்து : ஒரு உண்மையான சத்திய நெறியில் நிற்கும் குரு வந்து வழி காட்டினால் சிவம் நம் எண்ணத்தை விட்டு நீங்காது கலந்து நிற்கும் 2. நல்லன நூல் பல கற்பினும் காண்பரிதே எல்லையில்லாத சிவம் திரண்ட கருத்து : அனேக நூல்கள் – வேத சாஸ்திரங்கள் – உபனிஷத்துகள் – ஆகமங்கள் எல்லாவற்றையும் கற்று தேர்ந்தாலும்…