காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000 அமுதம் உற்பத்தியாகும் வகை ஏறுமே மூலக்கனல் மேலேவாசி இரண்டொன்றாய்க் கூடியது நடுவேனின்று மீறுமே முடிச்செலும்பை பத்தி நின்று மேனியெல்லாம் ஓடாது நடுவேயோடும் வாறுமே மேலேழும்பி நினைவைமேலே வாய்பொத்தி அச்சமயம் பிடரியேறும் சீறுமே மேலேறத் தள்ளும்பின்னால் திரும்பாமல் நாக்கின் வழிசாருந்தானே பொருள் : மூலக்கனலும் வாசியும் கலந்து நடுவே நின்று , உடலெல்லாம் ஓடாமல் – மேலேறும் . நடு நெற்றி சேரும் அப்போது நினைப்பை மேல் வைத்து…