கேசரம் – கேசரி 2 காக புஜண்டர் ஞானம் 80 – 6 “ கேளப்பா கேசரமே அண்ட வுச்சி “ கெட்டியாய்க் கண்டவர்க்கே மவுன மாகும் ஆளப்பா பரப்பிரம யோக மென்றே அடுக்கையிலே போதமுந்தான் உயரத் தூக்கும் வாளப்பா கெவுனமணி விந்து நாதம் வலுத்ததடா கெட்டியாய்த் திரண்டு போகும் நாளப்பா அண்ட மெல்லாஞ் சத்தி யோடு நடனமிடுஞ் சிலம்பொலியுங் காண லாமே. அதாவது சித்தர் என்ன கூற வருகிறார் எனில் ? உச்சி தான் கேசரம்…