சிற்றம்பலம் பெருமை பதி விளக்கம் – அருட்பா ஆறாம் திருமுறை எல்லாந்தான் உடையதுவாய் எல்லாம்வல் லதுவாய் எல்லாந்தான் ஆனதுவாய் எல்லாந்தான் அலதாய்ச் சொல்லாலும் பொருளாலும் தோன்றும்அறி வாலும் துணிந்தளக்க முடியாதாய்த் துரியவெளி கடந்த வல்லாளர் அனுபவத்தே அதுஅதுவாய் அவரும் மதித்திடுங்கால் அரியதுவாய்ப் பெரியதுவாய் அணுவும் செல்லாத நிலைகளினும் செல்லுவதாய் விளங்கும் திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர். சிற்றம்பலம் எத்தகைய வெளி எனில் ?? மிகச்சிறியதாகிய அணு கூட நுழைய முடியாத அளவுக்கு மிக மிக நுண்ணியதாக நுட்பம்…