சுத்தசாதகம் வினையினில் எடுத்த இவ்வுடல் மேலும் வினையுளதெனில் இங்கே அகலும் வினையில தெனில் இங்கு இவ்வுடல் தானே வினை அறும் ஓம் மயமாகி வினையுள உடல்போல் தோற்ற மாத்திரமாய் விளங்கியே வெந்துறு புரிபோல் வினையிலாப் பரம முத்தியில் வெளியாய் விமலநல் அருளதாய் விடுமே. பொருள் : தேகத்தின் இறுதி நிலை உணர்த்தும் பாடல் வினைக்கணக்கு இன்னம் தீரவிலை எனில் இந்த உடல் இந்த மண்ணில் விழும் – அதாவது மரணம் அடைவர் வினை இல்லை எனில் இந்த…