காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000 சுழுமுனை பெருமை காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000 ஆனாலே பொழிகாணும் புலன்கள்தோனும் ஆகாத கருவிகளும் அடங்கிப்போகும் போனாலே கற்பூர வாசம் வீசும் பொங்கு திரை மேலெழும்பும் மாய்கை போகும் வாணாளை ஏற்றிவிடும் புருவமத்தி வாசி கொண்டு நீட்டிவிடும் நாசிமத்தி தானாலே ஆகிடலாம் திறக்கப்பூட்டத் தந்திரங்கள் வேணுமப்போ சரங்கள்பாரே பொருள் : சுழுமுனை உச்சிக்கு ஏறிவிட்டால் , கருவி – புலன்கள் அடங்கிப்போகும் தேகத்தில் கற்பூர மணம்…