திருநாவுக்கரசர் பெருமான் அருளிய தேவாரம் – திருமுறை வேண்டாமை வேண்டுவது மில்லான் தன்னை விசயனைமுன் னசைவித்த வேடன் தன்னைத் தூண்டாமைச் சுடர்விடுநற் சோதி தன்னைச் சூலப் படையானைக் காலன் வாழ்நாள் மாண்டோட வுதைசெய்த மைந்தன் தன்னை மண்ணவரும் விண்ணவரும் வணங்கி யேத்தும் ஆண்டானை ஆவடுதண் டுறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே விளக்கம் : இறை பெருமை உரைக்கும் நாயனார் 1 வேண்டுதல் வேண்டாமை இலாதவன் 2 அர்ஜீன் அருளும் முன் சோதனை செய்தவன் 3…