திரு அருட்பா – ஆறாம் திருமுறை – ஆடேடி பந்து ஆடேடி பந்து – 9 இசையாமல் போனவர் எல்லாரும் நாண இறவாப் பெருவரம் யான்பெற்றுக் கொண்டேன் வசையாதும் இல்லாத மேற்றிசை நோக்கி வந்தேன்என் தோழிநீ வாழிகாண் வேறு நசையாதே என்னுடை நண்பது வேண்டில் நன்மார்க்க மாம்சுத்த சன்மார்க்கம் தன்னில் அசையாமல் நின்றங்கே ஆடேடி பந்து அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி பொருள் : சன்மார்க்க நெறிக்கு ஒத்துப்போகாதவரும் – ஒத்துக்கொள்ளாதவரும் வெட்கிப்போக நான் இறவா…