பட்டினத்தார் பாடல் – தன் தாயின் ஈமச்சடங்கின் போது பாடியது முன்னையிட்ட தீ முப்புரத்திலே பின்னையிட்ட தீ தென்னிலங்கையிலே அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே யான் இட்ட தீ மூள்கவே மூள்கவே கருத்து ( உலக முகம் நோக்கி ) : சிவம் முப்புரம் என்னும் மூன்று ராக்கதர்களை எரித்துக் கொன்றது போலும் , அனுமன் இலங்கையை தீக்கிரையாக்கியது போலும், அன்னையர்கள் நம் வயிற்றில் இட்ட பசித்தீ போலும் , யான் இட்ட தீ மூள்வதாக என்று பாடுகின்றார்…