புரவிபாளையம் சித்தர் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்றைக்கும் அவரை ஆராதித்து வருகின்றன. குலதெய்வக் கோயிலுக்குப் போகிறார்களோ இல்லையோ… ஆனால், இவரது திருச்சந்நிதிக்கு வந்து இவரை வணங்கிச் செல்கின்றனர். அந்த மகானின் சமாதியில் விதம் விதமான வண்ண மலர்களை வைத்து வழிபடுகிறார்கள்; ஊதுவத்தி ஏற்றி, தூபம் காட்டுகிறார்கள்; சமாதியை வலம் வருகிறார்கள். சமாதியின் மேல் முகம் புதைத்து, தங்களின் சுக துக்கங்களை – மீளாத் துயிலில் உறையும் அந்த மகானுடன் பரிமாறிக் கொள்கிறார்கள். அந்த மகான் – ‘ஸ்ரீலஸ்ரீ பொன்முடி…