அருட்பா 6ம் திருமுறை பேரருள் வாய்மையை வியத்தல் மனக்கேத மாற்றிவெம் மாயையை நீக்கி மலிந்தவினைதனக்கே விடைகொடுத் தாணவம் தீர்த்தருள் தண்ணமுதம்எனக்கே மிகவும் அளித்தருட் சோதியும் ஈந்தழியாஇனக்கேண்மை யுந்தந்தென் உட்கலந் தான்மன்றில் என்னப்பனே. விளக்கம் : மனத்துன்பம் எலாம் மாற்றி மாயை ஆம் மறைப்பு அகற்றி வினைகளை தகர்த்தெறிந்து ஆணவ இருள் அகற்றி இதெல்லாம் செய்து எனக்கு குளிர்ச்சியான அமுதம் அளித்து அருட்சோதி தந்து என் உடலில் அருள் ஒளியாக கலந்ததாக பாடுகிறார் சிற்றம்பலத்தில் ஆடும் அப்பன்…
Comments are closed.