மெய்யருள் வியப்பு – 30 1 ஏறா நிலையில் விரைந்து விரைந்திங்கு என்னை யேற்றியே இறங்காது இறங்கும் படிகள் முழுதும் எடுத்தாய் போற்றியே மாறாக் கருணை என்மேல் வைக்க வந்ததென்னையோ மதியிலேன் நின் அருட்குச் செய்த தவந்தான் முன்னையோ ( பாடல் 18 ) ஏறா நிலையில் விரைந்து விரைந்திங்கு என்னை யேற்றியே – சுழிமுனை நாடியில் உள்ளேயும் மேலேயும் வேகமாக தன் உணர்வு பாய்ந்த அனுபவம் பற்றிக் கூறுகின்றார் இறங்காது இறங்கும் படிகள் முழுதும் எடுத்தாய்…