“ ஶ்ரீகாரைச்சித்தர் கனக வைப்பு – வாசி பெருமை “ பேசிலவ மாமறையே பேசாத மோனத்தே வாசியதன் போக்கதனை வாசியடா வாசியடா வாசியற மனமறவே வாசிவையும் வந்திடுவாள் வாசிவனே யெனவுன்னை வாசியணை மேலணைவாள் 344 விளக்கம் : வேதாந்த நிலைக்கும் மௌனமாகிய ஆன்மாவுக்கு வாசியை பூரிக்க செய் வாசி அனுபவத்தால் மனமும் இறக்க – உமையாகிய சக்தியும் தரிசனம் கொடுப்பாள் சிவை – சக்தி வா வா சிவனே என ஆன்ம சாதகனை உச்சிக்கு இட்டு…