ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய தேவாரம் கரியா னைஉரி கொண்டகை யானைக் கண்ணின் மேல்ஒரு கண்ணுடை யானை வரியா னைவருத் தம்களை வானை மறையா னைக்குறை மாமதி சூடற் குரியா னைஉல கத்துயிர்க் கெல்லாம் ஒளியா னைஉகந் துள்கிநண் ணாதார்க் கரியா னைஅடி யேற்கெளி யானை ஆரூ ரானை மறக்கலு மாமே விளக்கம் : கருத்த யானை தோலை உரித்து போர்த்திக் கொண்டவனை இரு கண் மேல் நெற்றிக்கண் உடையானை அன்பர் தம் துன்பம் துயர் களைவானை…