அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 7
அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 7 1 கண்கலந்த கணவர்எனைக் கைகலந்த தருணம் கண்டறியேன் என்னையும்என் கரணங்கள் தனையும் எண்கலந்த போகம்எலாம் சிவபோகம் தனில்ஓர் இறைஅளவென் றுரைக்கின்ற மறைஅளவின் றறிந்தேன் விண்கலந்த திருவாளர் உயிர்கலந்த தருணம் வினைத்துயர்தீர்ந் தடைந்தசுகம் நினைத்திடுந்தோ றெல்லாம் உண்கலந்த ஆனந்தப் பெரும்போகம் அப்போ துற்றதென எனைவிழுங்கக் கற்றதுகாண் தோழி. பொருள் : இது ஆன்ம அனுபவம் குறிக்க வந்த அனுபவப் பாடல் ஆம் அதாவது கண்ணில் இருக்கும்…...