திருக்குறள் – சன்மார்க்க விளக்கம்
திருக்குறள் – சன்மார்க்க விளக்கம் ஒருமை பெருமை அதிகாரம்:அடக்கமுடைமை குறள் எண்:126 ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்எழுமையும் ஏமாப்பு உடைத்து பொழிப்பு (மு வரதராசன்): ஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது. பரிமேலழகர் உரை: ஆமை போல் ஒருமையுள் ஐந்து அடக்கல் ஆற்றின் – ஆமைபோல, ஒருவன் ஒரு பிறப்பின்கண் ஐம்பொறிகளையும் அடக்கவல்லன் ஆயின்; எழுமையும் ஏமாப்பு உடைத்து – அவ் வன்மை அவனுக்கு எழுபிறப்பின் கண்ணும் அரண் ஆதலை…...