சௌமிய சாகரம் – அகத்தியர்
சௌமிய சாகரம் – அகத்தியர் பதியான பதியதுதான் பரசொரூபம் பசுவான வாசியடா காலுமாச்சு விதியான பாகமாடா வீடதாச்சு வீடறிந்து கால் நிறுத்தி யோகஞ் செய்தால் கெதியான முச்சுடரும் ஒன்றாய் நின்று கேசரத்தில் ஆடுகின்ற கெதியைப் பார்த்தால் மதியான மதிமயக்கந் தானே தீர்ந்து மாசற்ற சோதியென வாழலாமே பொருள்: ஆன்ம ஒளி தான் பரசொரூபம் இறை சுவாசம் தான் வாசி ஆச்சு பிரணவ வீடு கட்டி, சுவாசத்தை அங்கு கட்டி, சோமசூரியாக்கினி கலைகள் கூடி ஆடும் இடத்தை கண்டாயானால்,…...