அகத்தியர் ஞான சைதன்யம் – 51
அகத்தியர் ஞான சைதன்யம் – 51 பாரும்என்று வேணதெல்லாம் சொல்வார்பின்னும் பாரில் அதிசயங்கள்தனைத் தெரியச் செய்வார் நேரும்என்ற மாய்கையொடு கோபம்தள்ளு நிலைஆங்காரப் பைசாசத்தைத் தள்ளு மேரும்என்ற நிட்டை சதாகாலம் நில்லு மேன்மைதரும் தாயாரைக் கண்டுகொள்ளு தேறிநின்ற அண்டத்தின் சோதிதன்னை தெளிவாக யான்பார்த்தேன் சேதிகேளே (14) விளக்கம் : இவ்வாறு கேசரி தவம் செய்து வருங்கால் , என்ன அனுபவம் கிட்டும் என தெளிவு படுத்துகிறார் சித்தர் பெருமான் தன் வாழ்வில் அதிசயம் அற்புதம் நிகழ்வதை காணலாம் ஆங்காரம்…...