ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 23 சாதிகுலம் சமயமெலாம் தவிர்த்தெனைமேல் ஏற்றித் தனித்ததிரு அமுதளித்த தனித்தலைமைப் பொருளே ஆதிநடுக் கடைகாட்டா தண்டபகி ரண்டம் ஆருயிர்கள் அகம்புறம்மற் றனைத்தும்நிறை ஒளியே ஓதிஉணர்ந் தவர்எல்லாம் எனைக்கேட்க எனைத்தான் ஓதாமல் உணர்ந்துணர்வாம் உருவுறச்செய் உறவே சோதிமய மாய்விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும் தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே பொருள் : இந்த உலக விகல்பம் – சாதி மதம் சமயம் வேறுபாடுகள் – எல்லாம் நீக்கி என்னை ஒருமை நிலைக்கு…