அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 28 கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே பொருள் : கற்றவர்க்கும் கல்லாதவர்க்கும் இன்பமளிக்கும் இன்பே கண்டவர்க்கும் காணார்க்கும் காட்சி அளிக்கும் கண்ணே எளியார்க்கும்…
Comments are closed.