அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 39 நீ நினைத்த நன்மைஎலாம் யாம்அறிந்தோம் நினையே நேர்காண வந்தனம்என் றென்முடிமேல் மலர்க்கால் தான்நிலைக்க வைத்தருளிப் படுத்திடநான் செருக்கித் தாள்களெடுத் தப்புறத்தே வைத்திடத்தான் நகைத்தே ஏன்நினைத்தாய் இவ்வளவு சுதந்தரம்என் மகனே எனக்கிலையோ என்றருளி எனையாண்ட குருவே தேன்நிலைத்த தீம்பாகே சர்க்கரையே கனியே தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே. பொருள் : நீ குறித்த நன்மை நாம் அறிந்துள்ளோம் அதனால் உனை நாம் காண…