அருட்பா – 6 ம் திருமுறை – உய்வகை கூறல் – 6 ஆக மாந்தமும் வேதத்தின் அந்தமும் அறையும் பாக மாம்பர வெளிநடம் பரவுவீர் உலகீர் மோக மாந்தருக் குரைத்திலேன் இதுசுகம் உன்னும் யோக மாந்தர்க்குக் காலமுண் டாகவே உரைத்தேன். பொருள் : வேதத்தின் அந்தமும் ஆகமத்தின் அந்தமும் கூறும் சிற்றம்பல வெளி நடம் போற்றுவீர் அடைவீர் உலகீர் – உலகத்துக்கு நன்மை உண்டாகவே – வழி காட்டவே இதை நான் யோக மாந்தர்க்கு செப்பினேன்…