வாழ்க்கைக் கல்வி நம் வாழ்வு ஒரு ஜீவ நதி போல் மகாநதி – கோதாவரி போல் வற்றாமல் ஓடிக்கொண்டே இருக்க வேணும் படிப்பு முடிந்தவுடன் வேலை பணி இதில் செட்டில் ஆனவுடன் திருமணம் பின் பிள்ளைகள் அவர்கள் கடமைகள் நாம் தாத்தா பாட்டி ஆவது என நம் வாழ்வு அடுத்த கட்டத்துக்கு மேலேறியபடி இருக்க வேணும் குளம் குட்டை மாதிரி தேங்கி நின்றுவிடக்கூடாது இது நம் வாழ்வின் எல்லா அங்கத்துக்கும் பொருந்தும்…