சுழுமுனை – நெற்றிக்கண் பெருமை காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000 காணுங்காண் ஞானவொளி கோடி சூரியன் கதிர்விட்டுத் தானெறியும் தூரந்தோற்றம் பூணுங்காண் உச்சியொளிர் புருவப்பூட்டு பூட்டுடைக்க வல்லவரே வாருங்காணும் தோணுங்காண் உங்களுக்கு தூரதிஷ்டி சொற்பலிக்கும் திரிகால வர்த்தந்தோற்றும் நரை மூப்பும் சாக்காடும் காணலாமே பொருள் : உச்சிப்பூட்டை திறக்க வல்லாரே ஞானவொளி ஆகிய கோடி சூரியப்பிரகாசம் உடை ஆன்ம ஒளிக் காண முடியும் அப்படித் திறந்தவர் என்ன லாபம் சித்தி அடைவர் எனில் ??…