காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000 பத்தாம் வாசல் பெருமை தெருவென்ப தெதுவென்றால் பத்தாம்வாசல் சிறுவாசல் புருவனடு அறிவின்வாசல் குருவென்றால் அவ்வாசல் திருவாம்வாசல் கொடுங்கோபம் அகற்றும் சமாதிவாசல் கருவென்றால் நினைவிருக்கும் முத்திவாசல் கணக்கறிந்து ஏறுவீரோ ஞானவீடு இருவென்றால் வாராதே இருந்துபார்ப்பீர் இத்தனைக்கும் காரணமே நெத்திவாசல் பொருள்: 10ஆம் வாசலுக்கு என்னென்ன பேர் வைத்து அழைக்கிறார் சிறுவாசல் அறிவு வாசல் திரு வாசல் புருவ நடு சமாதி வாசல் ஞான வீடு நெத்தி வாசல் இதுக்கு ஏறினோர்…