காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000 சுழுமுனை பெருமை காணலா மெத்தனையோ கோடாகோடி கண்ணுக்குள்ளே தெரியும் கிருஷ்ணனைப்போல் தோணலா மெதிர்நிற்கும் பாவனைபோல் துயரெல்லா மாற்றிவிடும் சுழிமுனை வாசல் வீணல்லால் மற்றொன்றில் காண்பதுண்டோ மிஞ்சினவர் சொல்கேட்ட வித்தை போல் நாணில்லா வில்லெறிந்த வீரன் போல் நாமறியத் தன்மை விட்டு நாடினாலே பொருள் : உச்சி திறந்தால் , அதினுளே கோடானு கோடி அண்டங்கள் – அகிலாண்டங்கள் பிரம்மாண்டமாய் காணலாகும் அதுக்கு துன்பம் துயர் நீக்கும் அற்புத சக்தி…